![bmn](http://image.nakkheeran.in/cdn/farfuture/WCYb5zNM2w7QzQMWUHr7x0xTRa0CvfVlTEvU9M6gfvY/1644845180/sites/default/files/inline-images/vote_15.jpg)
திமுக வேட்பாளர் மாரடைப்பால் உயிரிழந்ததையடுத்து வந்திராயிருப்பு பேரூராட்சியின் 2-வது வார்டு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் நான்கு நாட்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதற்கிடையே சில இடங்களில் வேட்பாளர்கள் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்து வருகிறார்கள். இதுவரை தமிழகம் முழுவதும் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் வேட்பாளர்கள் மரணமடைந்துள்ளதால் அந்த இடங்களில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பேரூராட்சியில் இரண்டாவது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனி என்கிற முத்தையா இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இதன்காரணமாக அந்த குறிப்பிட்ட வார்டில் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் (மாவட்ட ஆட்சியர்) மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.