Skip to main content

தேர்தல் அலுவலர்களை நியமித்த இந்தியத் தேர்தல் ஆணையம்!

Published on 30/01/2021 | Edited on 30/01/2021

 

The Election Commission of India has appointed election officials ...


திருச்சி மாவட்டம் சாரநாதன் பொறியியல் கல்லூரியில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில், 20 மாவட்டங்களில் இருந்து, தேர்தல் அலுவலர்கள் 118 பேருக்கு, பிரத்யேகப் பயிற்சி பெற்ற 7 பயிற்சியாளர்களைக் கொண்டு கடந்த 27.01.21 முதல் 30.01.21 வரை பயிற்சி நடத்தப்பட்டது. 

 

The Election Commission of India has appointed election officials ...

 

பயிற்சி வகுப்புகளை மேற்பார்வையிடவும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கும் பொருட்டு, திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரிக்கு வருகைதந்த தமிழகத் தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு, பயிற்சி பெற்றவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கியதோடு, தேர்தல் பணிகளைச் சிறப்பாகச் செய்ய வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
 

மேலும், நடைபெறக்கூடிய சட்டமன்றத் தேர்தலை மிகச் சிறப்பாகக் கையாள வேண்டும் என்றும் எப்போதும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்