!["Dr. Santa will also be remembered" - Prime Minister Modi](http://image.nakkheeran.in/cdn/farfuture/kvKW0Cl1F0gvOM82FXkQ2gOnUWRUHpJVIyE9SrVLxpY/1611028595/sites/default/files/inline-images/th-1_391.jpg)
“புற்றுநோய்க்காக மேற்கொண்ட உயர்தர சிகிச்சைக்காக சாந்தா என்றும் நினைவுகூரப்படுவார்” என அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் சாந்தாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாறு மருத்துவமனை தலைவர் சாந்தா, அப்போலோ மருத்துவமனையில் இதயநோய் சம்பந்தமாக சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று (19 ஜன.) காலை காலமானார்.
இவரது மரணத்திற்கு பிரதமர் மோடி, தனது அதிகார ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர், “புற்றுநோய்க்காக மேற்கொண்ட உயர்தர சிகிச்சைக்காக சாந்தா என்றும் நினைவுகூரப்படுவார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்காக அடையாறு புற்றுநோய் மருத்துவமனை சிறந்த சேவையாற்றி வருகிறது. 2018ஆம் ஆண்டில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்குச் சென்றதை நான் நினைவுகூருகிறேன். டாக்டர் சாந்தாவின் மறைவு வருத்தத்தை தருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.