திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ – மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஆரணி தொகுதி எம்.எல்.ஏவும், இந்த சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர்.ராமச்சந்திரன் வழங்கினார். அதேபோல் ஒவ்வொரு தொகுதியிலும் எம்.எல்.ஏக்கள் வழங்கவருகிறார்கள்.
![DMK Pitchandi speech](http://image.nakkheeran.in/cdn/farfuture/GoX8nAtbYlKcxwdi_cpqdjqKdgVCgwz1ryvrmt8QQpc/1582717611/sites/default/files/inline-images/11111_116.jpg)
அதன்படி கீழ்பென்னாத்தூர் தொகுதியில் உள்ள சு.வாளாவெட்டி ஊராட்சியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் உள்ள மாணவ – மாணவிகள் 150க்கும் மேற்பட்டவர்களுக்கு அரசின் இலவச மிதிவண்டியை கீழ்பென்னாத்தூர் தொகுதி எம்.எல்.ஏவும், திமுகவை சேர்ந்த தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் துணை கொறடாவுமான பிச்சாண்டி எம்.எல்.ஏ வழங்கினார்.
மிதிவண்டி வழங்கும் முன் மாணவ – மாணவிகள் முன் பேசிய பிச்சாண்டி, "இந்த மாவட்டம் ஏழை மக்கள் நிரம்பிய மாவட்டம். ஒருக்காலத்தில் உணவுக்கு வழியில்லாமல் பள்ளிக்கூடம் பக்கம் போகாவதர்கள் இருந்தனர். திராவிட இயக்கம் தான் முதன் முதலில் மதிய உணவு என்கிற திட்டத்தை உருவாக்கி பள்ளிகளில் உணவு வழங்கியது. அதன்பின் படிக்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அந்த திட்டத்தை முதல்வர்களாக இருந்த காமராஜர், அறிஞர் அண்ணா, கலைஞர் போன்றவர்கள் செயல்படுத்தினார்கள்.
பின்னர் அது சத்துணவு திட்டமாக மாறியது. கடந்த 2001 முதல் 2006 வரை முதல்வராக இருந்த கலைஞர் மதிய உணவில் முட்டை வழங்கினார். வாரத்தில் 5 நாளும் முட்டை வழங்கி சத்துள்ளவர்களாக மாற்றப்பட்டது. தற்போது விதவிதமான உணவுகள் கூட வழங்கப்படுகிறது.
அந்த வகையில் தான் பள்ளிக்கு நீண்ட தூரம் நடந்து வருவதை பார்த்து, அப்படி நடந்து வந்தால் அவர்கள் எப்படி படிப்பார்கள் என வேதனைப்பட்டு அரசு பேருந்துகளில் பள்ளிக்கு வந்து செல்ல இலவச பேருந்து அட்டைகள் கலைஞர் முதல்வராக இருந்தபோது தந்தார். அதன் தொடர்ச்சியாக குக்கிராமத்தில் இருந்து எப்படி வருவார்கள் என இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இது தற்போது வரை தொடர்கிறது. அரசாங்கம் இதுப்போன்ற சலுகைகள் வழங்ககாரணம், நீங்கள் படித்து நல்ல பணிக்கு செல்ல வேண்டும் என்பதற்காக தான் என்றார்.