Skip to main content

''2,079 கோடி ரூபாய் நிவாரணம் வேண்டும்'' - அமித்ஷாவிடம் திமுக எம்.பி டி.ஆர். பாலு கோரிக்கை!

Published on 17/11/2021 | Edited on 17/11/2021

 

DMK MP DR demands Rs 2,079 crore relief from Amit Shah

 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்த நிலையில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்றுவருன்றன. தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை, கடலூர் ஆகிய இடங்களில் மழை நீரால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கிய நிலையில், குமரி மாவட்டத்திற்கு நேரில் சென்று மழை சேதங்களை ஆய்வு செய்தார். மழை சேதம் குறித்து ஆய்வுகள் செய்ய அமைச்சர்கள் கொண்ட குழுவையும் முதல்வர் நியமித்திருந்தார்.

 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட சேதங்கள், சாலைகள், வடிகால்களை சீரமைப்பு செய்ய 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக நேற்று (16.11.2021) தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. நீரில் மூழ்கிச் சேதமடைந்த பயிர்களை மறுசாகுபடி செய்ய ஹெக்டேருக்கு 1,038 ரூபாய் மதிப்பீட்டில் இடுபொருட்கள் வழங்கப்படும். மழையில் முழுவதுமாக சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடாக ஹெக்டேருக்கு 20 ஆயிரம் வழங்கப்படும். குறுகிய கால நெல் விதை - 45 கிலோ, நுண்ணூட்ட உரம் - 25 கிலோ, யூரியா - 60 கிலோ, டிஏபி உரம் - 125 கிலோ வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

 

DMK MP DR demands Rs 2,079 crore relief from Amit Shah

 

கடந்த 14ஆம் தேதி சென்னை கொளத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர், ''வெள்ளச் சேதம் குறித்து பிரதமரைச் சந்தித்து நிதி கோரிக்கை வைப்போம்'' என தெரிவித்திருந்தார். இந்நிலையில், மழை வெள்ள பாதிப்புக்கு ரூபாய். 2,079 கோடி நிவாரணம் வழங்குமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தமிழ்நாடு அரசு சார்பில் திமுக எம்.பி டி.ஆர். பாலு கோரிக்கை வைத்துள்ளார்.

 

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த திமுக எம்.பி. டிஆர். பாலு, 'நவ. 8 முதல் 11 ஆம் தேதி வரை வழக்கத்தைவிட 49.6 சதவிகிதம் மழைபெய்துள்ளது. வெள்ளத்தால் 49,757 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் சேதம் ஏற்பட்டுள்ளது. எனவே மழைவெள்ள நிவாரணமாக ரூபாய் 2,079 கோடி வழங்க வேண்டும். அதிலும், 550 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்