Published on 10/06/2020 | Edited on 10/06/2020
![dmk mla anbazhagan mla incident cm palanisamy tweet](http://image.nakkheeran.in/cdn/farfuture/yPJUv8qRBb6uw5vy-cGbLRm3ExiLxbvqzHSCx7MWre8/1591760918/sites/default/files/inline-images/cm%20456.jpg)
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் (62 வயது) காலமானார். சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் பிரிந்தது. ஜெ.அன்பழகன் மறைவுக்கு வைகோ, கே.பாலகிருஷ்ணன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக தமிழக முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. ஜெ.அன்பழகனின் குடும்பத்தினருக்கும், அவர் சார்ந்த இயக்கத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்" என்று குறிப்பிட்டுள்ளார்.