![congress](http://image.nakkheeran.in/cdn/farfuture/uqsEfYrSrEHh10ivj83eqMgyM_dhgiBw5D5HyUVeaLM/1550686082/sites/default/files/inline-images/a8_1.jpg)
வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக, காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு பற்றிய அறிவிப்பை வெளியிட தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் சென்னை வருகை தந்துள்ளார்.
நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் எம்.பி கனிமொழி பேச்சுவார்ததை நடத்திய நிலையில் இன்று திமுக காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்புகள் வெளியாக உள்ளது.
தற்போது சென்னையில் கிண்டி ஓட்டலில் முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகளான முகில் வாஸ்னிக், கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர், சஞ்சய்தத், வசந்தகுமார், விஜயதாரணி, கே.ஆர்.ராமசாமி, வேணுகோபால் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அளித்த பட்டியலில் கடலூர் தொகுதி இல்லை என தகவல் வெளியான நிலையில் காங்கிரசுக்கு கடலூர் தொகுதி கேட்கப்படாததால் கே.எஸ்.அழகிரி போட்டியில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
.