தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று (25/08/2020) தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் தே.மு.தி.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இனிப்புகளை வழங்கினார்.
அதன்பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், "கரோனா நேரத்தில் மாவட்டந்தோறும் கட்சி நிர்வாகிகளுடன் ஆன்லைனில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் தே.மு.தி.க. தனித்து போட்டியிட வேண்டும் என்பதே தொண்டர்கள், நிர்வாகிகளின் எண்ணமாக உள்ளது. விஜயகாந்த் இனி கிங் ஆக இருக்க வேண்டும் என்பதே தே.மு.தி.க. தொண்டர்களின் எண்ணம்.
சட்டப்பேரவை தேர்தல் குறித்து டிசம்பர் (அல்லது) ஜனவரியில் பொதுக்குழு மற்றும் செயற்குழுவை கூட்டி முடிவெடுக்கப்படும். இப்போதைக்கு அ.தி.மு.க. உடனான கூட்டணி தொடர்கிறது; தேர்தலின் போது முடிவெடுக்கப்படும். சட்டப்பேரவை தேர்தலில் தே.மு.தி.க. கூட்டணியா, தனித்துப் போட்டியா என்பதை விஜயகாந்த் அறிவிப்பார். தே.மு.தி.க.விற்கு கிடைக்க வேண்டியது உரிய நேரத்தில் கிடைக்கும்" என்றார்.