![dmdk meeting](http://image.nakkheeran.in/cdn/farfuture/llzHzKEQcf_n8aSijVs704mU3Pd-E9I-KAkVU-NPCBU/1615259127/sites/default/files/inline-images/z09_1.jpg)
தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என தீவிரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில், திமுக கூட்டணியில், திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு முடிந்துள்ளது. தேமுதிகவுடன் 4 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், இதுவரை இரண்டு கட்சிகளும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இறுதி முடிவு எடுக்கவில்லை. இந்நிலையில் தேமுதிகவுக்கு 13 தொகுதிகள் வரை கொடுக்க அதிமுக சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், இதுதொடர்பாக இறுதிமுடிவு எடுக்கப்படும் என்றும் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னையில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. அதிமுக கொடுக்க இருக்கும் குறைந்த தொகுதிகளை ஏற்பதா? அல்லது தனித்து நிற்பதா? என இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.