காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய பாஜக அரசையும், அதற்கு முயற்சி எடுக்காத மாநிலத்தை ஆளும் அதிமுக அரசையும் கண்டித்து தமிழகத்தில் திமுகவும் அதன் தோழமை கட்சிகளும் ஏப்ரல் 5ந்தேதி முழு பந்த்க்கு அழைப்பு விடுத்தது. அதன்படி பந்த் நடைபெற்றது.
வேலூர் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து அதிமுக தொழிற்சங்கத்தினர் அரசு பேருந்துகள் சிலவற்றை இயக்கினர். அதனை மறித்து கோஷம் எழுப்பினர் திமுகவினரும், அதன் தோழமை கட்சியினரும்.
காலை 10 மணியளவில் வேலூர் மாநகரம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள சாரதி மாளிகை அருகே திமுகவினர் மற்றும் தோழமை கட்சியினர் மறியல் போராட்டம் செய்ய முயன்றனர். அப்போது வேலூர் மத்திய மாவட்ட தேமுதிக மா.செ ஸ்ரீதரன் கார் சென்றுள்ளது. அதை மடக்கி கோஷம்மிட்டுள்ளர் திமுக மத்திய மா.செ நந்தகுமார் எம்.எல்.ஏவின் ஆதரவார்கள். அதோடு செங்கல் கொண்டு கார் மீது எரிந்துள்ளார்கள். அதற்குள் முக்கிய பிரமுகர்கள் சிலர் தலையிட்டு அது தேமுதிக மா.செ கார். கல்லெடுத்து அடிக்கிறேன் என மோதலை உருவாக்கி வைக்காதீர்கள் எனச்சொல்ல அமைதியாகினார்கள்.
தன் கார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்மென வேலூர் வடக்கு காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளார் ஸ்ரீதர். ஏப்ரல் 5ந்தேதி இரவு காவல்நிலையத்தில், திமுகவினர் மீது உடனே வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோஷம்மிட்டனர். போலிஸ் அதிகாரிகள் இன்று வழக்கு பதிவு செய்வதாக கூறி சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.
இன்று ஏப்ரல் 6ந்தேதி எப்.ஐ.ஆர் இதுவரை பதிவு செய்யவில்லை என்பதால் தேமுதிக வழக்கறிஞர்கள் பிரிவு காவல்நிலையத்தை தொடர்பு கொண்டு வழக்கு பதிவு செய்தே ஆக வேண்டும் இல்லையேல் காவல்நிலையத்தை முற்றுகையிடுவோம் என கூறி வருகின்றனர்.
பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தியதாக 10 திமுகவினர் ஏப்ரல் 5ந்தேதி கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை இன்று 6ந்தேதி திமுக மா.செவும் எம்.எல்.ஏவுமான நந்தகுமார், எக்ஸ் எம்.பி முகமதுசகி ஆகியோர் சிறைக்கு சென்று நலன் விசாரித்தனர். விரைவில் உங்கள் அனைவரையும் பிணையில் வெளியே எடுக்கிறோம், எதற்காகவும் கவலைப்படாதீர்கள் என கட்சியினருக்கு ஆறுதல் கூறிவிட்டு வந்துள்ளனர்.
தேமுதிக மா.செ தந்த புகார் பதிவானால் இன்னும் சில திமுகவினர் இந்த வழக்கில் கைதாவார்கள் என கூறப்படுகிறது.
Published on 06/04/2018 | Edited on 06/04/2018