![a](http://image.nakkheeran.in/cdn/farfuture/Z_Ofmid5Ro8JHaKyGTDsgMULVlz5zHXukYFy2FMAZAA/1548957844/sites/default/files/inline-images/amir.jpg)
கன்னியாகுமரி இரனியல் பகுதியை சேர்ந்த அப்சல் ஜெனிஷ் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள சத்யாபாமா பல்கலைக்கழகத்தில் பி.இ. படிக்கும் போது அதே கல்லூரியில் படித்து வந்த சுரேகா என்ற பெண்ணிற்கும் ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாற, காதல் விவகாரம் பெண் வீட்டிற்கு தெரியவர, அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் காதலர்கள் கடந்த ஜனவரி 25 ஆம் தேதி கன்னியாகுமரியில் பதிவு திருமணம் செய்து பின்னர் தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
இதையடுத்து, பெண்ணின் தந்தை மகளை காணவில்லை என்று செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பின் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி அதிகாலை ஆறு மணிக்கு அப்சல் வீட்டுக்கு வந்த செம்மஞ்சேரி போலீஸ் செண்பகவல்லி, அப்சல் ஜெனிஷின் தாயார் அன்புலதா மற்றும் தந்தை ஆல்பட் தாஸையும் விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்றுள்ளனர். அவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லை.
இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன் இயக்குனர் அமீர், காதலர்கள் சுரேகா- அப்சலை மிரட்டியதாகவும் வாட் அப்பில் வீடியோ வெளியிட்டனர். மேலும் போலீஸ் சென்பகவல்லி, அப்சலின் பெற்றோர்கள் மிரட்டும் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக இயக்குனர் அமீரிடம் நாம் கேட்டபோது, இந்த தகவல் உண்மையல்ல என்று தெரிவித்தார். இதே போல் சம்பவம் தொடர்பாக செம்மஞ்சேரி காவல் ஆய்வாளரை பல முறை நாம் தொடர்பு கொண்டும் இணைப்பை எடுக்கவில்லை.