Skip to main content

கொரோனா அறிகுறியுடன் ஜிப்மர் உள்ளிட்ட 3 இடங்களில் 3 பேர் அனுமதி!  ரத்த மாதிரிகள் சோதனை! 

Published on 13/03/2020 | Edited on 13/03/2020

கொரோனா வைரஸால் உலகில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,26,139 ஆக உள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 4,633 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் உலகம் முழுவதும் கொரோனாவுக்கு 337 பேர் பலியாகியுள்ளனர்.  இந்தியாவில் கொரோனா பாதிப்பால் டெல்லியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை விடுமுறை விடப்பட்டுள்ளது. திரையரங்குகளும்  மூடப்படுகின்றன.

 

 3 people allowed, including Zipmer with Corona sign! Blood samples tested!

 

இதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், புதுச்சேரியில் 3 பேர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனை, அரசு மார்பக புற்றுநோய் மருத்துவமனை மற்றும் பிம்ஸ் தனியார் மருத்துவமனைகளில் 3 பேர்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள மத்திய அரசின் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் ஜிப்மர் மருத்துவமனையில் புதிதாக துவங்கப்பட்டுள்ள ஆய்வுக்கூடத்திலும் ரத்தமாதிரிகள் பரிசோதனை செய்யப்படும் நிலையில் முதல் 10 மாதிரிகள் சோதனை செய்து பின் புனே ஆய்வுக்கூடத்தின் அறிக்கையுடன் ஒப்பிட்டு இதன் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கப்படும். மேலும் இந்த ஆய்வின் முடிவுகள் இன்றே தெரியவரும் என சுகாதாரத்துறை இயக்குநர் மோகன் குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்