கமல் 60’ எனும் பிரம்மாண்டமான விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் எஸ்ஏ.சந்திரசேகரன் கலந்துகொண்டார். நிகழ்ச்சி மேடையில் அவர் பேசும்பொழுது தயங்கி தயங்கி ஒரு விஷயத்தை வெளிப்படுத்த கமலஹாசனிடம் கேட்டார். அதன் பிறகு பேசிய அவர், ரஜினியும் கமலும் அரசியலுக்கு வருவது என்பது உறுதி அதே நேரத்தில் இருவரும் அரசியலில் சாதிப்பதும் உறுதி. ஆனால் அப்படி சாதிப்பது என்றால் இருவரும் தனித்தனியே அரசியலுக்கு வருவதை விட இருவரும் ஒன்றாக சேர்ந்து அரசியல் செய்தால் கண்டிப்பாக தமிழகத்தில் நல்ல ஆட்சியை, அராஜகம் அற்ற ஆட்சியை தருவார்கள்.
அவர்களுக்கு பிறகு அரசியலில் அவரது தம்பிகளுக்கும் இருவரும் இடம்விட வேண்டும் என்றார். இதில் மறைமுகமாக விஜய்க்கு அரசியலில் வழிவிட வேண்டும் என்பதாக இருந்தது. இது அரங்கத்தில் குதூகலத்தையும் அதேபோல் ஒரு பக்கம் சர்ச்சையை ஏற்படுத்தியது.