Skip to main content

மூக்கு பொடி சித்தரிடம்  அடிவாங்குவதற்கும்,  திட்டுவாங்குவதற்கும்  வரும் பக்தர்கள்!

Published on 02/09/2019 | Edited on 02/09/2019

 

பூட்டுக்கு பெயர் போன திண்டுக்கல்லுக்கு இப்ப தான் மத்திய அரசும் புவிசார் குறியீடு கொடுத்து திண்டுக்கல் பூட்டுக்கு பெருமை சேர்த்து இருக்கிறது.  அப்படிபட்ட திண்டுக்கல் மாநகரில் தான் மூக்கு பொடி சித்தரும் உலாவி வருகிறார்.

 

p


     

கடந்த நாற்பது வருடங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில்  இருந்து திண்டுக்கலுக்கு வந்த பிச்சை என்ற மூக்கு பொடி சித்தர் கடைவீதி பகுதிகளில் ஒரு ரூபாய்,  இரண்டு ரூபாய் வாங்கி  வயிற்றை கழுவி கொண்டு அங்கங்கே உள்ள கடைகளுக்கு முன்பும், தெருக்களில் ஓரம் சாரங்களிலும் உட்கார்ந்தும்  படுத்தும்  வந்தவர்,  கடந்த  15 வருடங்களாக யாரிடமும் காசு பணம் வாங்காமல் அங்கங்கே ஓரம் சாரங்களிலும்  உட்கார்ந்து வந்த மூக்கு பொடிசித்தருக்கு தானாகவே மக்கள் முன்வந்து சாப்பாடு வாங்கிகொடுப்பதும்,  மூக்கு பொடி மட்டை வாங்கி கொடுப்பதும், பணம் கொடுப்பதுமாக முன் வந்தாலும் கூட மூக்குபொடி  சித்தர் அதை கை நீட்டி வாங்குவதில்லை.   அதனால் பொதுமக்களும் கூட அதை கீழே வைத்து விட்டு கை எடுத்து கும்பிட்டு விட்டு சென்றால்,  அவர்கள் நினைத்த காரியம்  நடப்பதை கண்டு பெரும்பாலான பொதுமக்கள் மூக்கு பொடி சித்தரின் பக்தர்களாகவே மாறி விட்டனர்.

 

   அதிகாலையில் மெயின் ரோட்டில் உள்ள டிசைன்ஸ்  கடைமுன்பும், அதன் எதிரே உள்ள மந்தை காளியம்மன் கோவில் சந்து பகுதிகளில் உட்கார்ந்தும் படுத்தும் ,அப்பகுதிகளில்  நடந்து  செல்வதும் மூக்குபொடி சித்தரின் வழக்கம்.    அப்பொழுது பக்தர்கள் யாரும் ஆசிவாங்க சென்றால் திடீரென்று  அடித்து விடுவதும்,  திட்டுவதும் நடைமுறையாகவே  வைத்து இருக்கிறார்.   இப்படி மூக்கு பொடி சித்தரிடம் அடிவாங்கினால் நல்லது,  திட்டுவாங்கினால் நல்லது  என்ற பெருமையுடனே பக்தர்களும் வருகிறார்கள்.

 

m

 

அதோடு திருமணம் ஆகாத பெண்கள்  இந்த மூக்கு பொடி சித்தரின் கண் பார்வை பட்டாலே திருமணமும் கைகூடிவிடுமாம்.  அதனாலயே திருமணம் ஆகாத பெண்களை பெற்றோர்கள் கூட்டிகிட்டுவந்து ஆசிவாங்கியும் செல்கிறார்கள்.

 
ஒருசில நேரங்களில்  மூக்குபொடி சித்தரிடம்  பக்தர்கள் பணம் கொடுத்தால் வாங்கி கொண்டு ஆசிர்வதிப்பார் சில நேரங்களில் பணம்,  மூக்குபொடிமட்டை கொடுத்தாலும் வாங்க மறுக்கும் போது கீழே போட்டு விட்டு போய்விடுகிறார்கள்.  அதில் மூக்குபொடி மட்டையை மட்டுமே ஒருசில  நேரங்களில் சித்தர் எடுத்து கிட்டு போய்விடுவார்.  கீழே
கிடக்கிற பணத்தை எடுக்க மாட்டார். அதுபோல் பக்தர்களிடம் வாங்கிய பணமும் கீழே தான் போட்டு இருப்பார். அந்த பணத்தை எல்லாம் மூக்கு பொடி சித்தர் வேறு இடத்திற்கு போகும் போது அப்படியேதான் கிடக்கும் அதை அருகே இருக்கும் பக்தர்கள்  எடுத்துக் கொண்டு போய் விடுகிறார்கள்.  அதுபோல் மூக்கு பொடி சித்தருக்கு  சாப்பாடு, டிபன் போன்ற வற்றை வாங்கி வரும் பக்தர்கள் அதை பிரித்து  வைத்து விடுவார்கள்.

 

விருப்பப்பட்டால் அதை சாப்பிடுவார்.  இல்லை என்றால் அப்படியே கிடக்கும்.  இப்படி  தினசரி மூக்குபொடி சித்தரை தேடி வந்து பக்தர்கள் ஆசி வாங்குவதும், அடி வாங்கிட்டு போவதும், திட்டுவாங்கிட்டு போவதுமாக பக்தர்கள் நகரில் வலம் வந்து வருகிறார்கள். இதனால்  நாளுக்கு நாள் மூக்கு பொடி சித்தருக்கு பக்தர்களும் அதிமாகி கொண்டு வருகிறார்கள்.

சார்ந்த செய்திகள்