Published on 06/08/2019 | Edited on 06/08/2019
அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபியில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கினார்.
![ச்ச்](http://image.nakkheeran.in/cdn/farfuture/3e5i7GfRI3PD2eo3RPMZWQ41ISIEQdZ5fWtu689VpYE/1565070830/sites/default/files/inline-images/ss_11.jpg)
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஒரே தலைமையாக செயல்பட்டு பல்வேறு நலத்திட்டங்களை தமிழக மக்களுக்காக நிறைவேற்றி வருகிறார்கள். தமிழகத்தில் நலிந்தோருக்கான ரூ.2 ஆயிரம் விரைவில் வழங்கப்படும். 1 கோடி பேருக்கு வீடு வீடாகச் சென்று இந்த 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கியது. தமிழக அரசு தான்’’என்று தெரிவித்தார்.