தமிழகத்தில் கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என தலித் கிறிஸ்தவர்கள் தேசிய பேரவை கண்டனம் தெரிவித்தனர். தலித் கிறிஸ்தவர்களை பாதுகாக்க புதிய கட்சி துவங்குவதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தலித் கிறிஸ்தவர்கள் தேசிய பேரவை பொதுச்செயலாளர் இ.டி சார்லஸ் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசினார்.
பத்திரிகையாளர்களிடம் பேசும் போது…
நீதிபதி ரெங்கநான் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையில் பௌத்தம் மற்றும் சீக்கியம் மதத்தை தழுவிய தலித் மக்களுக்கு மத்திய அரசு எஸ்.சி அந்தஸ்து வழங்கியது போல் கிறிஸ்தவ தலித் மக்களுக்கும் எஸ்.சி. அந்தஸ்து வழங்க வேண்டும். என்கிற எங்கள் கோரிக்கையை மத்திய அரசு அலட்சியப்படுத்தி காலம் தாழ்த்தி வருகிறது.
இதனால் அரசிலில், வேலைவாய்ப்புகள், வங்கிகடன், கல்விகடன் ஆகியவற்றில் புறந்தள்ளபடுகிறோம். இந்த அநீதியை எதிர்த்து 15 வருடங்களாக போராடி வருகிறோம்.
இப்படி பாதிக்கப்படும் தலித் கிறிஸ்தவர்களின் பாதிப்புகளில் இருந்து மீட்டெடுக்க தலித் கிறிஸ்தவ தேசியதலைவர் ஜார்ஜ், பொதுசெயலாளர் சார்லஸ் மற்றும் விஜய்முத்துகுரி, தனம், உள்ளிட்ட தலைவர் இணைந்து மத்திய அரசுக்கு எதிராக 2004ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம்.
மிக நீண்ட போராட்டத்திற்கு பிறகு இந்த வழக்கு கடந்த 8.01.2020 அன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் முன்பு விசாரணைக்கு வந்து மத்திய அரசுக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளார். இதில் நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
தற்போதைய மத்திய, மாநில அரசுகளின் செயல்பாட்டினால் தமிழகத்திலேயே சிறுபான்மை கிறிஸ்தவ மக்கள் அன்றாட வாழ்க்கை நடைமுறைகள், மதச் சடங்குகள், ஆலய ஆராதனைகளில் கலந்து கொள்வதும் மிகப் பெரிய சவாலாக இருந்து வருகிறது.
வட இந்தியாவில் உள்ள பீகார், ஒடிசா, குஜராத், மாநிலங்களில் கிறிஸ்தவர்களுக்கும், மிஷனரிகளும் இழைக்கப்படும் கொடுமைகள் அநீதிகள், அச்சுறுத்தல்கள், படுகொலைகள் போல தமிழகத்திலும் தற்போது ஆங்காங்கே தலை காட்டத் துவங்கியுள்ளது.
கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறைகளும், அச்சுறுத்தல்களும் கட்டவிழ்த்து விடப்படுகிறது.
சமீபத்தில் மதுரையில் மதபோதகர் அவரது மனைவி அச்சுறுத்தப்பட்ட போதும் ஜெபவீடு நாசப்படுத்த போதும் அதிமுக அரசு எந்தவித பாதுகாப்பு அளிக்கவில்லை. எங்களது பாதுகாப்பு கிறிஸ்தவ ஆலயங்கள், மருத்துவமனைகள்,கல்வி நிறுவனங்கள் மற்றும் விடுதிகள் இவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் பாதுகாப்பு அளிக்க வேண்டும். சிறுபான்மையினர்கள் அனைவரையும் பாதுகாக்கும் வகையில் தலித் கிறிஸ்தவர் தேசிய பேரவையின் தலைவர்கள், மற்றும் ஒத்த கருத்துள்ள பல்வேறு அமைப்புகளோடும், பேராயர்களோடும் பேசி வருகிறோம். புதிய அரசியல் கட்சி துவங்குவதற்காக பேசி வருகிறோம் என்றார்.