Published on 13/10/2020 | Edited on 13/10/2020
![delhi supreme court medical higher studies quota obc](http://image.nakkheeran.in/cdn/farfuture/sAKC7aqunNiwrtBw2Q1h9gPN5tnoKbJQl56nmDLZs1U/1602587078/sites/default/files/inline-images/supreme-court_reuters_5.jpg)
மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீட்டை நடப்பாண்டே அமல்படுத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று (13/10/2020) விசாரணைக்கு வந்தபோது, மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீட்டை நடப்பாண்டு அமல்படுத்த முடியுமா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மத்திய அரசிடம் கேட்டு தெரிவிக்க அரசு தரப்பு கூடுதல் வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.
மேலும், தமிழக அரசு, அ.தி.மு.க. தரப்பில் தொடர்ந்த வழக்கை அக்டோபர் 16- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.