Published on 18/02/2019 | Edited on 18/02/2019

டெல்லியில் உள்ள கரோல் பாக் பகுதியில் உள்ள அர்பிட் பேலஸ் ஓட்டலில் கடந்த 12-ந்தேதி அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 2 பேர் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள டெல்லி போலீசார் அர்பிட் பேலஸ் ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயல் என்பவரை தேடி வந்தனர்.
இந்நிலையில், ராகேஷ் கோயல் கத்தார் நாட்டில் இருந்து விமானம் மூலம் டெல்லி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதைதொடர்ந்து, டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு விரைந்து சென்ற போலீசார் ராகேஷ் கோயலை கைது செய்தனர்.