Skip to main content

திருவாரூர் மருத்துவக்கல்லூரியில் தண்ணீர் இல்லாமல் டயாலிசிஸ் நிறுத்தம்;நோயாளிகள் போராட்டம்!

Published on 06/07/2019 | Edited on 06/07/2019

தண்ணீரின்றி டயாலிசிஸ் செய்ய முடியாமல் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் அவதியுற்றுவருகின்றனர், இதனை கண்டித்து நோயாளிகள் திடீரென காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Thiruvarur


திருவாரூர் மாவட்ட ஆட்சியரகத்திற்குள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது,  இந்த மருத்துவமனையை நம்பி திருவாரூர் நாகை காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பயன்பெருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் முதல் டயாலிசிஸ் செய்வதற்கு 22 கருவிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தனர். இந்த கருவிகள் மூலமக மூன்று மாவட்ட மக்கள் சிறுநீரக கோளாறு காரணமாக பாதிக்கப்பட்ட நோயாளிகள் வாரம் தோறும் டயாலிசிஸ் செய்து வருகின்றனர்.

Thiruvarur


இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மருத்துவமணையில் தண்ணீர் இல்லாமல் டயாலிசிஸ் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் கடுமையான சிரமத்திற்கு ஆட்படுத்தப்பட்டுள்ளனர். இதில் நேற்று சிகிச்சைக்காக வந்த சுந்தரி என்பவருக்கு டயாலிஸ் செய்யமுடியாமல் காத்திருந்த அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Thiruvarur


இது குறித்து நோயாளிகள் கூறுகையில்."தண்ணீர் இல்லை எனவே சிகிச்சை அளிக்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்து திட்டுகின்றனர். அதனால் கல்லூரி முதல்வரிடம் முறையிட்டபோது அவர் மின்வாரியத்தில் உள்ள பிரச்சனை நாங்கள் என்ன செய்ய முடியும் என தெரிவித்துவிட்டார். இதனால் நோயாளிகள் அனைவரும் மருத்துவமனை வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

உடனடியாக இந்த பிரச்சினையை சரி செய்து உடனடியாக டயாலிசிஸ் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்," என்கின்றனர். இதனை வலியுறுத்தி 50க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த திடிர் போராட்டத்தால் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்