Skip to main content

தமிமுன் அன்சாரிக்கு சிறந்த இளம் எம்எல்ஏ விருது

Published on 22/02/2020 | Edited on 22/02/2020

மஹாராஷ்டிரா மாநிலத்தில் 72 பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது "MIT- WORLD Peace UniverCity" .இதில் 58-ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்தியாவின் புகழ்பெற்ற முதல் 10 தனியார் பல்கலைக் கழகங்களில் இதுவும் ஒன்று. இந்தியாவில் இங்கு மட்டும்தான்  M.A முதுநிலையில் அரசியல் அறிவு மற்றும் மேலாண்மைக்கான  என்ற சிறப்பு படிப்பு உள்ளது. .  இங்கு படித்தவர்கள் இந்தியா முழுக்க M.P, MLA-க்கள் என்ற நிலையில் உருவாகி உள்ளனர்.

 

 damimun Ansari won Best Young MLA award

 

இந்நிறுவனத்தின் வழிகாட்டலில் படிதான் "இந்திய மாணவர் பாராளுமன்றம்" என்ற அமைப்பு கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் கொள்கையும், திறமையும் கொண்ட அரசியல் தலைவர்களை உருவாக்குவதே இதன் நோக்கம். அந்த அடிப்படையில் இந்தியாவின் முன் மாதிரி இளம் அரசியல் தலைவர்களை கண்டறிந்து இப்பல்கலைக்கழகம் விருதுகளை வழங்கி ஊக்குவித்து வருகிறது.

இவ்வாண்டு இந்தியாவின் பல்வேறு ஆய்வுகள் மற்றும் சட்டமன்ற தரவுகளின் அடிப்படையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி எம்எல்ஏவை தேர்வு செய்தது.

 

 damimun Ansari won Best Young MLA award

 

தமிழ்நாட்டில் முதல் விருதை பெறுபவரும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது. இன்று தலைநகர் டெல்லியில் விஞ்ஞான் பவனில் நடைப்பெற்ற நிகழ்வில் பல அறிஞர் பெருமக்கள் முன்னிலையில் இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டது. ஐவரிகோஸ்ட் நாட்டிலிருந்து வருகை தந்த ஐக்கிய நாட்டு சபையின் மக்கள் தொகை நிதியக்கத்தின் பூடான் இயக்குனர் Ms.Argentina matavel, ஜெயின் மத அறிஞர் ஆச்சார்யா டாக்டர் லோகேஷ் அவர்களும் இணைந்து அவருக்கு இந்த விருதை வழங்கினர்.

இதில் ஆஸ்திரேலியாவில் இருந்து காணொளியில் பாபா ராம்தேவ் வாழ்த்துரை வழங்கினார்.

பீஹாரை சேர்ந்த பிரபல அறிஞர் மௌலானா டாக்டர் செய்யது கல்பே ருசைத், பிரபல இந்து மத அறிஞர் ஸ்ரீ கம்லேஷ் D.பட்டேல், பல்கலைகழக துணைவேந்தர் டாக்டர் N.K.AHUJA, முன்னாள் துணை வேந்தர் டாக்டர் S.பரசுராமன், பல்கலைககழக செயல் தலைவர் ராகுல் விஸ்வநாத் சாரட் ஆகியோர் இந்நிகழ்வில் முன்னிலை வகித்தனர்.

 

 damimun Ansari won Best Young MLA award


இதில் மஜக பொருளாளர் ஹாரூண்  ரசீது, துணைப் பொதுச்செயலாளர் தைமிய்யா, மாநில துணைச் செய்லாளர்கள் ஷமீம் அகமது, நாகை முபாரக், மஜக சகோதரர்கள் ஜாஸிம், இப்ராகிம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

நாடு முழுக்க எல்லா மாநிலங்களிலிருந்தும் மாணவ பிரதிநிதிகளும், பேராசிரியர்களும், அரசியல் வல்லுனர்களும்  வருகை தந்திருந்தனர். இந்த விருதை அவர் பெற்றதும் , முதலில் என் தாய் மொழியில் ஏற்புரை செய்கிறேன் என அவர் ஆங்கிலத்தில் கூற அரங்கம் அதிர்ந்தது.

 

 damimun Ansari won Best Young MLA award

 

எல்லாப் புகழும் இறைவனுக்கே..!
தமிழ் வாழ்க..
தமிழ்நாடு வாழ்க ...!

என்றதும் தமிழ்நாட்டு மாணவர் பிரதிநிதிகள் ஆராவரித்தனர். தந்தை பெரியாரும், திருவள்ளுவரும் தமிழர்களின் வழிகாட்டிகள் என்றவர், இந்த விருதை என் நாகை தொகுதி மக்களுக்கும், மனிதநேய ஜனநாயக கட்சியின் தொண்டர்களுக்கும்  சமர்பிக்கிறேன் என்றார்.



 

சார்ந்த செய்திகள்