திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் திருக்கோவிலுக்கு அடுத்தப்படியாக தாடிக்கொம்பில் உள்ள அகரம் முத்தாலம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்த முத்தாலம்மன் திருக்கோவில் அகர முத்தாலம்மன் இச்சை. கிரியை. ஞானம் என்ற மூன்று அம்சத்தில் கையில் அட்சய பாத்திரத்துடன் நின்ற திருக்கோலத்தில் மூன்று உருவங்களில் காட்சி அளிக்கிறார். கருவறை அர்த்த மண்டபம், மகா மண்டபம், முகப்பு மண்டபங்கள் ஆகி அமைப்புடன் திருச்சுற்று பிரகாரத்துடன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் திருச்சிற்றம் பிரகாரத்தில் ஸ்ரீ விநாயகா சிவலிங்கேஸ்வரர் ஸ்ரீ விசாலாட்சி ஸ்ரீ பாலமுருகன் ஸ்ரீ மகாலட்சுமி ஸ்ரீ துர்க்கை நவக்கிரகங்கள் ஆகிய மூர்த்திகளுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன.
அந்த மண்டபத்தில் கன்னி மூலையில் ஒரு விநாயகர் வீற்றிருக்கிறார். காவல் தெய்வமாக ஆண் ஒன்றும் பெண் போதும் ஒன்றும் பிரகாரத்தில் பெரிய சிலைகளாக அமைந்துள்ளன. இக்கோயில் 450 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த திருக்கோவிலில் சுமார் 110 ஆண்டுகளுக்கு முன்பு திருக்கோவிலை பரிபாலனம் செய்த சக்கராயர் சந்ததிகள் தாம் பலரிடம் பெற்ற கடனுக்காக திண்டுக்கல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மன்றத்தில் இத்திருக்கோயில் டிகிரி ஆகியுள்ளது.
இப்போதைய அறங்காவலர்கள் முன்னோர்களின் 14 பேர் சக்கராயரின் சந்ததிகள் வாங்கிய கடன் தொகையை சம்பந்தப்பட்டவர்களுக்கு செலுத்தி கோவில்களையும் அதன் உரிமைகளையும் 1898 ஆம் ஆண்டு மே மாதம் 26- ஆம் தேதி திண்டுக்கல் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து அதன் மூலம் சுத்த கரையும் பெற்றுள்ளனர். அதனை தொடர்ந்து கிரையம் பெற்ற 14 வாரிசுகளும், இத்திருக்கோயிலின் பரம்பரை அறங்காவலராக இருந்து வருகின்றன அவர்களுடைய பராமரிப்பின் கீழ் திருக்கோவில் 1990ஆம் ஆண்டு மற்றும் 2005 ஆம் ஆண்டு குடமுழுக்கு செய்யப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி முதல் முதல் வாரத்தில் திருவிழா நடப்பது வழக்கம் அதுபோல தான் கடந்த 10- ஆம் தேதி கண்திறப்பு மண்டபத்தில் முத்தாலம்மன் கோவில் திருவிழா சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து 14- ஆம் தேதி முதல் நாள் தோறும் இரவு கோவிலில் இருந்து பண்டார பெட்டியும், அம்மன் உற்சவரும், கொலு மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியாக இன்று முத்தாலம்மன் கண் திறப்பு நிகழ்ச்சி அம்மனின் ஆயிரம் பொன் சப்பரத்தில் கொலுமண்டபம் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை செவ்வாய்க்கிழமை அம்மன் பூஞ்சோலைக்கு செல்லும் விழாவும் மிக
சிறப்பாக நடைபெற உள்ளது.
இந்த அகர முத்தாலம்மன் கண் திறப்பை காண தாடிக்கொம்பு சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு முத்தாலம்மன் கண் திறப்பு நிகழ்ச்சியை தரிசித்து விட்டு சென்றனர். முத்தாலம்மன் திருக்கோவிலின் திருவிழா ஏற்பாட்டை பரம்பரை நிர்வாக அறங்காவலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். விழாவில் அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் என பொதுமக்களுடன் பலரும் கலந்து கொண்டு முத்தாலம்மனை தரிசித்து விட்டு சென்றனர்.