Published on 14/11/2020 | Edited on 14/11/2020

கடலூரில் சிறை காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மத்திய சிறையின் சிறைக்காவலர் சுரேஷ்குமாரை சஸ்பெண்ட் செய்து சிறை கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சிறையில் கைதிக்கு கஞ்சா கொடுத்ததாக சிறை காவலர் சுரேஷ்குமார் மீது புகார் எழுந்த நிலையில் தற்போது அவர் மீது இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறைக்கைதிக்கு கஞ்சா கொடுத்து சிறை காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் சிறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.