Skip to main content

கடலூர் வெள்ளம்; மீட்புப் பணியில் இறங்கிய காவல் கண்காணிப்பாளர் (படங்கள்)

Published on 02/12/2024 | Edited on 02/12/2024

 

 

தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக புதுச்சேரி, விழுப்புரம்,  திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழையானது பொழிந்து வருகிறது. கடலூர் மாவட்டம் பாபு குளம் கிராமத்தில் வெள்ள நீர் அதிகமாக வருவதாக கிடைத்த தகவலின் பேரில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. ராஜாராம் அவர்கள்  தனது அதிவிரைவு மீட்பு குழு சகிதம் உடனடியாக பாபு குளம் விரைந்தார். வெள்ள நீரால் வெளியே வர முடியாமல் தவித்த முதியவர் ஒருவர் நான் வீட்டை விட்டு வெளியே வர மாட்டேன் என பிடிவாதமாக கூறியவரை காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று ஆறுதல் கூறி பத்திரமாக மீட்டுப் பாதுகாப்பான இடத்தில் கொண்டு வந்து சேர்த்தார் .

கடலூர் செம்மண்டலம் குறிஞ்சி நகர், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை காவல்துறை மீட்பு குழுவினர்  படகுகள் மூலம் பத்திரமாக மீட்டனர்.பண்ருட்டி பகண்டை தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்டும் வேலை செய்து கொண்டிருந்த கொல்கத்தா மாநிலத்தைச் சேர்ந்த 8 தொழிலாளர்களை தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர் கயிறு மூலம் மீட்டுப் பாதுகாப்பாக இடத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தனர். 

சார்ந்த செய்திகள்