இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் தூத்துகுடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் சிஐடியு மாநில செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் மற்றும் மீனவ கூட்டமைப்பினர் இராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி குமரெட்டியாபுரம் பகுதி மக்கள் கடந்த 100 நாள்களாக அமைதியாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தின் 100 வது நாளான கடந்த இரண்டு தினங்களுக்கு முன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற மக்களின் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். போலீஸாரின் இந்தக் கொடூர தாக்குதலுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனமும், எதிர்ப்பு நிலவிவரும் நிலையில், இன்று சிஐடியு ன் மீனவ கூட்டமைப்பினர் இராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட ட னர் மேலும் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு கடலில் மலர் தூவி மலரஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்யில் ஏராளமானோர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.