
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர்(45). இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் கடத்தூர் நகரப் பொறுப்பாளராக இருந்து வருகிறார். சுதாகரின் உறவினரின் 16 வயது சிறுமி ஒருவர் அந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று அதிகாலை சிறுமி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவரின் வீட்டிற்குச் சென்ற சுதாகர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி கத்தி கூச்சலிட, பதற்றத்தில் அங்கிருந்து சுதாகர் தப்பிச்செறுள்ளார்.
இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், த.வெ.க. நிர்வாகி சுதாகரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.