சிதம்பரம் இராமசாமி மேல்நிலைப் பள்ளியில் புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி மற்றும் கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து சிதம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு இலவச இருதய மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு சங்க தலைவர் அருண் அனைவரையும் வரவேற்றார். சங்க செயலாளர் மருத்துவர் பாலாஜி சுவாமிநாதன் தலைமை தாங்கி முகாம் நோக்கம் பற்றி எடுத்துரைத்தார். கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி புல முதல்வர் திருப்பதி, கடலூர் மாவட்ட அரசு சுகாதார பணிகள் இணை இயக்குனர் ஹிரியன் ரவிக்குமார் முகாமை துவக்கி வைத்தனர். ரோட்டரி முன்னாள் ஆளுநர் கேதார்நாதன், ஜெயராமன், புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி இருதய சிறப்பு மருத்துவர் பார்த்திபன் வாழ்த்துரை வழங்கினர்.
முகாமில் 330 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இருதய நோய் அறிகுறிகள் இருந்த 203 நபர்களுக்கு ஈ.சி.ஜி எடுக்கப்பட்டது. 79 க்கும் மேற்பட்டவர்களுக்கு எக்கோ பரிசோதனை செய்யப்பட்டது. 24 நபர்களுக்கு ஆஞ்சியோகிராம், இருதயத்தில் துளைக்கான சிகிச்சை மற்றும் இருதய அறுவை சிகிச்சைகளை புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனையில் இலவசமாக செய்ய பரிந்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியை ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் மஹபூப் உசேன் தொகுத்து வழங்கினார்.
முகாமில் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் சஞ்சய், ராமகிருஷ்ணன், கே.ஜி. நடராஜன், அழகப்பன், சோனா. பாபு, சக்திவேல், செல்வநாராயணன், சித.ராமசாமி, இளையராஜா, அரிதனராஜ், இராமசாமி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராமன், ரத்த தான கழக தன்னார்வலர் ராமச்சந்திரன், கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் புதுச்சேரி மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள், ஊர்க்காவல் படையினர், பள்ளி என். எஸ். எஸ். மாணவர்கள் கலந்து கொண்டனர். மருத்துவர் விஜயகுமார் நன்றி கூறினார்.