Published on 02/03/2025 | Edited on 02/03/2025

இசையமைப்பாளர் இளையராஜாவின் வீட்டிற்கு நேரில் சென்று தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நான்கு தசாப்தங்களுக்கு மேல் திரைத்துறையில் பணியாற்றி வரும் இளையராஜா, தற்போது 35 நாட்களில் ஒரு முழு சிம்பொனியை உருவாக்கி முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வரும் 8 ஆம் தேதி இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் இளையராஜாவின் முதல் நேரடி சிம்பொனி இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் லண்டனில் நேரடி சிம்பொனி நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி முதல்வர் ஸ்டாலின் இளையராஜாவின் வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார்.