கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த காவனூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கசாமி மகன் கோவிந்தராசு, அருகிலுள்ள ஊரில் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரும் மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த மருதமுத்து மகள் அர்ச்சனாவும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 22ஆம் தேதி இருவரும் இரு சக்கர வாகனத்தில் ஆண்டிமடம் நோக்கி சென்று கொண்டிருந்த போது, அர்ச்சனாவின் புடவை இருசக்கர வாகனத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் விபத்தில் தலை மற்றும் முகம் பகுதியில் பலத்த காயம் அடைந்ததால், அர்ச்சனா சென்னை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
அர்ச்சனாவின் உறவினர்கள் திருமணம் செய்து கொள்ளும்படி ஆசிரியர் கோவிந்தராஜன் வீட்டிற்கு சென்று முறையிட்ட போது கோவிந்தராஜ் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து, நேற்று மாலை ஆசிரியர் கோவிந்தராஜ் வீட்டிற்கு சென்ற அர்ச்சனா கோவிந்தராஜின் வீட்டு வாசலில் அமர்ந்து தன்னை திருமணம் செய்ய வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அர்ச்சனாவுக்கு விபத்து ஏற்படாத போது திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறிய கோவிந்தராஜ் தற்போது விபத்து ஏற்பட்டு அர்ச்சனாவின் ஒரு பகுதி முகம் சிதைந்திருப்பதை காரணமாக காட்டி திருமணம் செய்ய மறுத்து வருவதாக கூறப்படுகிறது.
அர்ச்சனா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட உடன் கோவிந்தராஜின் பெற்றோர்கள் வீட்டின் கதவை சாத்தி விட்டு வெளியேறி விட்டனர். அதேசமயம் அர்ச்சனா இன்றும் இரண்டாவது நாளாக தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அவரது தந்தை விருத்தாச்சலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரப்பரப்பு நிலவி வருகிறது.