அரசாங்கத்தால் மர்ம காய்ச்சல் என பெயர் வைக்கப்பட்டுள்ள டெங்கு, பன்றிக்காய்ச்சலுக்கு தமிழகத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் டெங்கு காய்ச்சலுக்கு, சித்த மருத்துவத்தில் நிலவேம்பு கசாயம் தந்தால் சரியாகிடும்விடும் என்கின்றனர் மருத்துவர்கள்.
கடந்த ஆண்டு ஒவ்வொரு கிராமத்திலும் திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள் பொதுமக்களுக்கு இலவசமாக சொந்த செலவில் நில வேம்பு கசாயம் தந்தனர்.
வேலூர் மாவட்டத்தில் தினம் குறைந்தது ஒருவர் என இறந்து வருகின்றனர்.
கொசு ஒழிப்பு பணியில் மாவட்ட ஆட்சியர் ராமன் இறங்கினாலும், நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் அவ்வளவாக பணியாற்றததால் கொசுவை ஒழிக்க முடியாமல் திணறி வருகிறது.
அதிகாரிகளை பார்த்தால் டெங்குவை கட்டுப்படுத்த முடியாது என்பதால் திமுகவினர் இந்த ஆண்டும் களமிறங்கியுள்ளனர்.
வாணியம்பாடி நகர திமுக பொறுப்பாளர் சாரதிகுமார் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் தரும் நிகழ்ச்சி அக்டோபர் 31ந்தேதி நடைபெற்றது.
இதில் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் முத்தமிழ்செல்வி கலந்துக்கொண்டு, பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். அதோடு, டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணவு துண்டுபிரச்சுரங்கள் நகரத்தில் வழங்கினர்.
இதேபோல் மாவட்டத்தின் அனைத்து நகரம் மற்றும் பேரூராட்சியிலும் ஒவ்வொரு வார்டிலும் நிலவேம்பு கசாயம் தரும் பணியை திமுக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
அமைச்சர் நிலோபர்கபிலின் ஊரில் அதிரடியாக திமுகவினர் களம் இறங்கியதை பார்த்து ஆளும் கட்சியாக உள்ள அதிமுகவினர் அதிர்ச்சியடைந்தனர்.