திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்தவர் குணசேகரன் (50). நகை தொழிலாளி. அவரது மனைவி அமுதா (46), மகள் வித்யா (18), மகன்கள் விஜயன் (16), அரிகரன் (12). குணசேகரன் நகை கடை வைத்திருந்து நஷ்டமடைந்ததால் வெள்ளி வியாபாரம் செய்து வந்தார். வறுமை அவரை விரட்டியது அத்தோடு சர்க்கரை நோயும் இணைந்து கொண்டதால் செலவுகளை சமாளிக்க முடியவில்லை. குடும்ப வறுமையை நினைத்து மகள் வித்யா உள்ளூரிலும் மகன் விஜயன் கோவையிலும் வேலைக்கு போனார்கள். கடைசி பையன் ஹரிகரன் சிறுவனாக இருந்ததால் பள்ளிக்கு போனான்.
இன்று அதிகாலை ஹரிகரன் எழுந்து பார்த்த போது அம்மாவும் அக்காவும் எழுந்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு மீண்டும் தூங்கினான் காலையில் எழுந்த போது அம்மாவும் அக்காவும் தூக்கில் பிணமாக தொங்க பக்கத்து அறையில் அப்பா பிணமாக கிடந்தார்.இதைக்கண்டு கதறிய சிறுவனின் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் போலிசுக்கும், உறவினர்களுக்கும் தகவல் சொன்னார்கள். கோவையிலிருந்து விஜயன் வந்து கொண்டிருக்கிறான்.
வறுமையை நினைத்து குணசேகரன் விஷம் குடித்து இறந்துள்ளார். அவர் இறந்து கிடப்பதை அதிகாலையில் அறிந்த மனைவியும் மகளும் தூக்கில் தொங்கிவிட்டார்கள். அவ்வளவு பாசமான குடும்பம் அது என்று அக்கம் பக்கத்தினர் கூறினர்.வறுமையும், நோயும் ஒரு குடும்பத்தையே அழித்துவிட்டு இரு சிறுவர்களை ஆதரவற்றவர்களாக்கிவிட்டது. இனி என்ன செய்யப் போகிறார்கள் இந்த சிறுவர்கள்..