திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே காய்கறி சந்தை உள்ளது. அதனை சுற்றி உள்ள பகுதியில் உள்ளவர்களுக்கு காய்கறி சந்தை இதுதான். பெருமளவில் மக்கள் கூட்டம் எப்போதும் இருக்கும் இந்த பகுதியில் கஞ்சா செடி வளர்ப்பதாக கண்டோன்மெண்ட் போலீசாருக்கு தகவல் வந்ததையடுத்து காவல் துறையினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
கண்டோன்மென்ட் ஏசி மணிகண்டன் இது குறித்து விசாரிக்க சொல்லி உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் போலிசார் விசாணையில் இறங்கினர். அப்போது கஞ்சா செடி அங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து திருச்சி சுப்ரமணியபுரம் ஜெய்லானியா தெருவை சேர்ந்த ஷாகுல் ஹமீது (36), பாலக்கரையை சேர்ந்த சக்திவேல் (32) ஆகிய இருவரையும் கஞ்சா செடி வளர்த்ததாக கண்டோன்மென்ட் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.
திருச்சி மாநகரின் மையப்பகுதியில்
பொதுமக்கள் கூடும் இடத்தில் கஞ்சா செடி வளர்த்து இருப்பது பொதுமக்கள் இடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சமூக விரோத செயலான இந்த செடி வளர்ப்பு எப்படி இவ்வளவு நாள் போலிசுக்கு தெரியாமல் இருந்தது என்பது தான் அதிர்ச்சியாக உள்ளது.