Published on 19/02/2021 | Edited on 19/02/2021
![Court orders to start M.Tech admission in Anna University!](http://image.nakkheeran.in/cdn/farfuture/0Jp3nw1eKwXFvaLBr_nI9Dxtd7XpWmx_aHkyfUhPHCY/1613720742/sites/default/files/inline-images/retre6tyreytryryr.jpg)
அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டு எம்.டெக் படிப்புகளில் மத்திய அரசின் ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில், பையோடெக்னாலஜி, கம்பியூடேஷனல் ஆகிய இரண்டு எம்.டெக் பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டது. இதுதொடர்பாக மாணவர்களான சித்ரா, குழலி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் அந்தக் குறிப்பிட்ட இரண்டு எம்.டெக் படிப்பில் இந்த ஆண்டே மத்திய அரசின் 49.5 சதவிகித இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கையை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.