தமிழ்நாடு, மஹாராஷ்ட்ரா, ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மேலும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. இருப்பினும், மஹாராஷ்ட்ரா உட்பட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் இன்று (01.04.2021) முதல் இணை நோய் இல்லாத 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 4,688 மையங்கள், 1,900 மினி கிளினிக்குகள் என 6,588 இடங்களில் கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் 1.2 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி போட சுகாதாரத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 6.51 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.