












வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணர்வு முகாம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னை மாவட்ட ஆட்சியர் சீத்தாலட்சுமி,வருவாய் துறை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் விஸ்வநாதன், தீயணைப்பு மற்றும் மீட்பு குழு பொறுப்பு ஆணையர் சைலேந்திரபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின்போது, தீ விபத்தில் சிக்கிக்கொண்டவர்களை மீட்பது குறித்தும் வெள்ளம் புயல் போன்ற பேரிடர் சமயங்களில் மேற்கொள்ளப்படும் மீட்பு நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், மீட்பு பணிகளில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள், அவற்றை பயன்படுத்தும் முறைக் குறித்தும் மீட்பு படையினர் விளக்கினர்.