
கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கடலூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்திருந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடலூர் துறைமுகம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்லும் வழியில் கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் விவரம், நிலைய எழுத்தர் அறை ,பதிவேடுகள், ஆண் கைதி அறை, பெண் கைதி அறை, காவல் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், சிசிடிவி பதிவேடுகள், காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறைச் செயலர் தாரேஷ் அகமது, மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உட்பட பலர் உடனிருந்தனர்.