உலகம் முமுவதும் கரோனா பலி 22 ஆயிரத்தைத் தாண்டிக்கொண்டியிருக்கும் நிலையில் இந்தியாவிலும் கரோனோ பரவியிருக்கும் நிலையில் அதைத் தடுக்கும் விதமாக நாடு முமுவதும் 24-ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டு அது நடை முறையில் இருந்து வருகிறது. இதில் தமிழகத்தில் கரோனா பரவாமல் தடுக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் மதுரையில் கரேனா வார்டில் அனுமதிக்கபட்டியிருந்த ஒருவா் சில தினங்களுக்கு முன் இறந்தார். இதற்கிடையில் அண்டை மாநிலமான கேரளாவில் கரோனாவுக்கு 164 போ் பாதிக்கபட்டுள்ளனா். இதனால் எல்லை மாவட்டமான குமரி தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா தனி வார்டில் 22 போ் அனுமதிக்கபட்டு அவா்கள் தீவிரமாகக் கண்காணி்க்கப்பட்டு வந்தனா். இதில் கடந்த 24-ம் தேதி நாகா்கோவிலைச் சோ்ந்த 56 வயது பெண் ஒருவா் இறந்தார்.
இதனைத் தொடா்ந்து கடந்த 13-ம் தேதி குவைத்தில் இருந்து வந்த கோடிமுனையைச் சோ்ந்த ஜெகன் (40) கடுமையான காய்ச்சலால் கொரோனா வார்டில் அனுமதிக்கபட்டியிருந்த நிலையில் 26-ம் தேதி இறந்தார். அதே போல் அதே நாள் முட்டத்தைச் சோ்ந்த 2 வயது குழந்தையும் கரோனா வார்டில் இருந்து இறந்தது. மேலும் ராஜாக்கமங்கலம் துறையைச் சோ்ந்த 66 வயதான முதியவா் ஒருவரின் மகன் கத்தார் நாட்டில் இருந்து வந்தார். இதையடுத்து அந்த முதியவருக்கு உடல் நிலை சரியில்லாமல் ஆசாரிப்பள்ளம் கரோனா வார்டில் அனுமதிக்கபட்டியிருந்த நிலையில் நேற்று 27-ம் தேதி இறந்தார். அதே போல் நேற்று இரவு திருவட்டாரைசோ்ந்த ராஜேஷ் (24) என்ற இளைஞரும் கொரோனா வார்டில் இருந்து இறந்தார்.
இதையடுத்து குமரி மாவட்டத்தில் கரோனோ வார்டில் சிகிச்சையில் இருந்த 5 போ் அடுத்தடுத்து இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் கூறும்போது, இறந்து போனவா்களில் மூன்று போ் கிட்னி, நிமோனியா நோயால் பாதிக்கபட்டவா்கள். மேலும் 5 பேரின் மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பபட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்த பிறகு தான் கரோனாவால் இறந்தார்களா? இல்லையா? என்பது தெரியவரும் எனத் தெரிவித்தது.