![covai](http://image.nakkheeran.in/cdn/farfuture/UPMNFqapOPPy0TI12uiBXp3rjZIni5OzuFfh21TrVVM/1585238604/sites/default/files/inline-images/952.jpg)
சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ், தற்போது உலகின் பல்வேறு நாடுகளுக்கு பரவி உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் கரோனா வைரஸால் 4,86,000 அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதமு 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. இது இந்திய பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கரோனா சிறப்பு வார்டு கோவையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு கோவை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பி.ஆர்.நடராஜன் எம்பி ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கினார். கரோனோ நோய்த் தொற்று அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதிலிருந்து நம் மக்களை கூடிய விரைவில் மீட்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஒரு கோடி நிதியை அவர் வழங்கியுள்ளார்.