Skip to main content

சுற்றித்திரிந்த 100 பேரின் இருசக்கர வாகனங்கள் பறிமுதல்! இளைஞர்களுக்குத் தோப்புக்கரண தண்டனை!

Published on 25/03/2020 | Edited on 26/03/2020

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன. அதனை பொருட்படுத்தாமலும், ஆபத்தை உணராமலும் விருத்தாசலத்தில் சில இளைஞர்கள் நகரப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் வலம் வந்தனர். அதனால் காவல்துறையினர் அந்த இளைஞர்களைப் பிடித்து நோயின் தாக்கம், அதனால் பாதிப்பு, பரவும் விதத்தை அறிவுறுத்தி மீண்டும் இருசக்கர வாகனத்தில் சுற்றாமல் இருக்க அறிவுரைகளை வழங்கி தோப்புக்கரணம் போட வைத்து அனுப்பினர்.

 

 corona virus - Erode police - 100 vehicles seized

 



இதேபோல் கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெய்வேலி, பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம், திட்டக்குடி பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் வந்த 100-க்கும் மேற்பட்டோரைப் பிடித்ததுடன் அவர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் தடை உத்தரவை மீறியதாக 20-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிந்தனர்.

 

cadalur



இதனிடையே கடலூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நெய்வேலி, கங்கைகொண்டான் பேரூராட்சிக்கு உட்பட்ட நுழைவுவாயிலில் அவ்வழியே அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வந்த அனைத்து வாகனங்களுக்கும் கிரிமிநாசினி அடிக்கப்பட்டு வருகிறது. அடுத்த 20 நாட்களுக்கும் கிருமிநாசினி அடிக்கப்படும் என பேரூராட்சி அலுவலகம் தெரிவித்துள்ளது. இதேபோல் விருத்தாச்சலம் நகரின் கடைகளில் கிருமி நாசினி அடிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி அடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

சார்ந்த செய்திகள்