![Corona patients waiting for treatment in the ambulance](http://image.nakkheeran.in/cdn/farfuture/Rt1JtMC7yAulDaNSlPDOZLkB-Q7XNmL9t31HLgx5lCQ/1620649805/sites/default/files/2021-05/108-ambulance-1.jpg)
![Corona patients waiting for treatment in the ambulance](http://image.nakkheeran.in/cdn/farfuture/UIoIQXYucFaVD7dRhuJHB2zixw3mzsiKZQOxhHldQtI/1620649805/sites/default/files/2021-05/108-ambulance-2.jpg)
![Corona patients waiting for treatment in the ambulance](http://image.nakkheeran.in/cdn/farfuture/IiVQ0sQEyyH-hoLY8fGYNLOzKNjW82A4dl8Om-DzXNQ/1620649805/sites/default/files/2021-05/108-ambulance-3.jpg)
![Corona patients waiting for treatment in the ambulance](http://image.nakkheeran.in/cdn/farfuture/P5bR3qUuG56Ltt6ADczmNoA6s5QbL5ft03wiS3gnRlU/1620649805/sites/default/files/2021-05/108-ambulance-4.jpg)
![Corona patients waiting for treatment in the ambulance](http://image.nakkheeran.in/cdn/farfuture/_LU49XjUoY-BBbLPaQFHcQHk6TJkOe5d4xgjxFLo_mA/1620649805/sites/default/files/2021-05/police-check-1.jpg)
![Corona patients waiting for treatment in the ambulance](http://image.nakkheeran.in/cdn/farfuture/FKxoYSs8-UezEzJJo9mxcZ5ltWX_uKnvDQ-o5OTPguM/1620649805/sites/default/files/2021-05/police-check-2.jpg)
Published on 10/05/2021 | Edited on 10/05/2021
இந்தியா முழுவதும் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்துள்ளதால் ஆங்காங்கே முழு ஊரடங்கானது அமலில் உள்ளது. அதேபோல் சில மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று (10.5.2021) முதல் 24.5.2021 வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையும், இறப்பின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால் சென்னையில் பல அரசு மருத்துவமனைகளிலும் படுக்கை வசதி இல்லாமல், நோயாளிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு இடமில்லாத காரணத்தால் ஆம்புலன்ஸ் வாகனங்களில் நோயாளிகள் உள்ளனர். வாகனங்கள் அனைத்தும் வெளியே வரிசையில் நிற்கின்றன. அதேபோல் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வாலாஜா சாலையில் வாகன சோதனையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.