![Corona Care Center established at Don Bosco School](http://image.nakkheeran.in/cdn/farfuture/TvemXEOPh30fP6n_B-oG6rSWZbmp1GKGsodjEtosw7U/1621491756/sites/default/files/2021-05/scl-hsptl-2.jpg)
![Corona Care Center established at Don Bosco School](http://image.nakkheeran.in/cdn/farfuture/3D2AmoyybJmubfIDkUuBWyJwLSzJ3RPNwiiDMfxCm6k/1621491756/sites/default/files/2021-05/scl-hsptl-1.jpg)
![Corona Care Center established at Don Bosco School](http://image.nakkheeran.in/cdn/farfuture/tR1oSAyZFckeSvQADoVHwUevvmPOffUQENyHFRgY7cU/1621491756/sites/default/files/2021-05/scl-hsptl-4.jpg)
![Corona Care Center established at Don Bosco School](http://image.nakkheeran.in/cdn/farfuture/wjYWjm8ZRvJSw2owD6TF0W35tmzgHX0J8_EmLPFOhmM/1621491756/sites/default/files/2021-05/scl-hsptl-3.jpg)
![Corona Care Center established at Don Bosco School](http://image.nakkheeran.in/cdn/farfuture/WqD_GqftZt2VzvF9gE-O56QygvJGCLFeo8xzR1fGQZw/1621491756/sites/default/files/2021-05/scl-hsptl-5.jpg)
![Corona Care Center established at Don Bosco School](http://image.nakkheeran.in/cdn/farfuture/CvkxBHQgmBkYbYwguVqvemo1sGJQ1jzI3sKv8eXx-J4/1621491756/sites/default/files/2021-05/scl-hsptl-6.jpg)
![Corona Care Center established at Don Bosco School](http://image.nakkheeran.in/cdn/farfuture/2ixV7tn_p-UOCV2mH5-DGXZwocF_iHTJr7aWcp2DU7I/1621491756/sites/default/files/2021-05/scl-hsptl-7.jpg)
![Corona Care Center established at Don Bosco School](http://image.nakkheeran.in/cdn/farfuture/1DkgJBJxDeRr_da5gePUDMokCezixAwJe5ocdOK6n-Y/1621491756/sites/default/files/2021-05/scl-hsptl-8.jpg)
![Corona Care Center established at Don Bosco School](http://image.nakkheeran.in/cdn/farfuture/cgaI2xsUmH8QYM_vLJTt2VEihIArkfRS5pHtibYWTAk/1621491756/sites/default/files/2021-05/scl-hsptl-9.jpg)
![Corona Care Center established at Don Bosco School](http://image.nakkheeran.in/cdn/farfuture/HF2T-WzseHiLaW4wLsYxnvlYjDXCXl7QRrRrxHLrW3Y/1621491756/sites/default/files/2021-05/scl-hsptl-10.jpg)
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலையின் பரவல் கடும் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பல மருத்துவமனைகளிலும் படுக்கை வசதி, ஆக்சிஜன் ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நோயாளிகளின் பாதிப்பைக் கருத்தில்கொண்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட அமைச்சர்களின் உதவியோடு மேற்கொண்டுவருகிறது.
அந்தவகையில், முதற்கட்டமாக கரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு படுக்கை வசதி தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க ஆக்சிஜன் வசதியுடம் கூடிய படுக்கை வசதிகளை தமிழக அரசின் அனுமதியோடு பல தனியார் நிறுவங்கள் பாதுகாப்பு மையம் அமைத்து உதவிவருகின்றன. அந்த வகையில், சென்னையில் உள்ள டான் போஸ்கோ உயர்நிலைப்பள்ளி 104 படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா பராமரிப்பு மையத்தை நிறுவியுள்ளது. அதனை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பானது நடைபெற்றது அதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் சிங் பேடி ஆகியோர் பங்கேற்றனர்.