நாவரசு கொலையில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் ஜாண்டேவிட்டை விடுதலை செய்ய தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டை முன்னிட்டு நீண்டகாலம் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விடுதலை செய்து வரும் நிலையில், இந்த பரிசீலனை நடைபெற்று வருகிறது.
’கடந்த 1996-ம் ஆண்டு சிதம்பரம் அண்ணா மலை பல்கலைக் கழக மாணவரும் துணைவேந்தர் பொன்னுசாமியின் மகனுமான நாவரசு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டி எடுக்கப்பட்டு சூட்கேஸ்களில் வைத்து அடைத்து பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டது.
நாவரசு கொலையில் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் அவருடன் படித்த மாணவரான ஜான்டேவிட் கைது செய்யப்பட்டார். கொலை செய்தது உறுதியானதை அடுத்து அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். 20 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வருவதால் இவரை விடுதலை செய்யலாமா என்பது குறித்து சிறைத்துறையுடன் தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. ’’