Skip to main content

செஸ் ஒலிம்பியாட்டை புறக்கணிக்கும் காங்கிரஸ்- செல்வப்பெருந்தகை அறிவிப்பு 

Published on 27/07/2022 | Edited on 27/07/2022

 

 Congress boycotts Chess Olympiad- announcement

 

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு வெகு விமர்சையாக செய்துவருகிறது. தமிழ்நாடு முழுவதும் செஸ் ஃபீவரை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் அந்த ஃபீவர் கொஞ்சம் கூடுதலாக உள்ளது. சென்னையில் திரும்பு இடங்கள் எல்லாம் செஸ் ஒலிம்பியாட் குறித்தான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

 

நாளை பிரதமர் மோடி தமிழகம் வர இருக்கும் நிலையில், 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தலைவர் செல்வப்பெருந்தகை, 'இந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி காங்கிரஸ் எம்.எல்ஏக்கள் புறக்கணிக்கிறோம். இந்த புறக்கணிப்பு பிரதமர் மோடிக்கு எதிரானதே தவிர செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு எதிரானது அல்ல. மக்கள் விரோத, ஜனநாயக விரோத செயல்பாடுகளுக்கு ஒன்றிய அரசு துணைபோவதால் இதனை புறக்கணிக்கிறோம்' என தெரிவித்துள்ளார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்