Published on 12/05/2022 | Edited on 12/05/2022
![The collector who relocated the tasildars!](http://image.nakkheeran.in/cdn/farfuture/haKX1d8n1o29c-8bO-UI5MA-YYck_DsnYWwgt6Y9sCY/1652331944/sites/default/files/inline-images/th_2257.jpg)
கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், கரூர் மாவட்டத்தில் உள்ள 6 தாசில்தார்களை பணியிடை மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியராக இருந்த யசோதா, கிடங்கு மேலாளர் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் வட்டாட்சியராகவும், தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மேலாளராக இருந்த மோகன்ராஜ் புகளூர் வட்டாட்சியராகவும், குளித்தலை வட்டாட்சியராக இருந்த விஜயா, தனி வட்டாட்சியர் (தேர்தல்) பிரிவு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும், தனி வட்டாட்சியர் (தேர்தல்) பிரிவு பொறுப்பில் இருந்த சிவகுமார் குளித்தலை வட்டாட்சியராகவும், இலங்கை தமிழர் மறுவாழ்வுத்துறை தனி வட்டாட்சியராக இருந்த நேரு, பேரிடர் மேலாண்மை வட்டாட்சியராகவும் பணியிடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார்.