Skip to main content
Breaking News
Breaking

செல்ஃபி எடுப்பதில் தகராறு; பள்ளி மாணவர்களிடையே மோதல்!

Published on 27/11/2024 | Edited on 27/11/2024
Clashes between school students over selfies

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்டலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்குப் பயிலும் மாணவர்கள் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள். பள்ளி வேலை நேரம் முடிந்து தங்களுடைய சொந்த கிராமத்திற்குச் செல்வதற்காக அரசு பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையத்தில் நேற்று பேருந்துக்காக நின்றுக் கொண்டிருந்தனர். அப்போது மாணவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் திடீரென  மாணவர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக அடித்துக் கொண்டு தாக்கிக் கொண்டதால் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்து நிலையத்தில் இருந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சங்கராபுரம் காவல்நிலைய காவலர்களை பார்த்ததும் மாணவர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடி உள்ளனர். போலீசார் மாணவர்களை விரட்டி பிடித்து ஒரு சில மாணவர்களிடம் எதற்காக அடித்துக் கொண்டார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்ட நிலையில் செல்போனில் செல்பி எடுப்பதில் ஏற்பட பிரச்சனை எனக் கூறப்படுகிறது.

பள்ளி மாணவர்களிடையே பேருந்து நிலையத்தில் மோதிக்கொண்ட சம்பவம் சங்கராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்