![Chief Secretary consults with non-Chennai District Collectors !!](http://image.nakkheeran.in/cdn/farfuture/35m183tqcR4e_ietXvwKlssrt11huYjD4aodNJf1hB8/1595593038/sites/default/files/inline-images/esd_0.jpg)
தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் ஒரே நாளில் 5,136 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு 6,472 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,92,966 அதிகரித்தது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் கரோனா அதிகரித்து வரும் நிலையில், பொது முழுமுடக்கம் வரும் ஜூலை 31- ஆம் தேதி முடிவடைகிறது. அடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து முடிவெடுக்க சென்னை தவிர்த்து, பிற மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
ஏற்கனவே ஒரு வாரத்திற்கு முன்பு மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலர் சண்முகம் ஆலோசனை ஈடுபட்டிருந்தார். தற்போது இரண்டாவது முறையாக மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.