Published on 07/10/2021 | Edited on 07/10/2021
![The Chief Minister who gave Rs. 2 crore as an incentive to Mariappan!](http://image.nakkheeran.in/cdn/farfuture/UNMURbP-jxlaacDEAYqB4bIgj1TpoZIXEH2-G1xg9DY/1633588662/sites/default/files/inline-images/MARIYA43434.jpg)
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (07/10/2021) நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் 2020 போட்டிகளில் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற டி. மாரியப்பனுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக ரூபாய் 2 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதன்மைச் செயலாளர், உறுப்பினர் செயலர் ஆகியோர் கலந்துகொண்டனர்.