Skip to main content

மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய எம்.எல்.ஏ!

Published on 27/07/2021 | Edited on 27/07/2021

 

Chidambaram constituency MLA who provided relief aid to the disabled

 

சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் ஏற்பாட்டில் 100 மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா நிவாரண உதவியாக அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

 

நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள், மாவட்ட கழக அவைத்தலைவர் குமார், நகர கழக செயலாளர் செந்தில்குமார், முன்னாள் நகர கழக செயலாளர் தோப்பு சுந்தர், மாவட்ட பாசறைச் செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம், தலைமை கழக பேச்சாளர்கள் தில்லை கோபி, தில்லை செல்வம், ஆவின் கூட்டுறவுச் சங்கத் தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


 

சார்ந்த செய்திகள்