சென்னை போரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், "சென்னையில் 39,590 தெருக்களில் 9 ஆயிரம் தெருவில் பாதிப்பு இருந்த நிலையில் 8 ஆயிரமாக குறைந்துள்ளது. தமிழகத்தில் 13 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 8 லட்சம் பேர் மருத்துவ முகாம்களில் பங்கேற்றுள்ளனர்; நாளை முதல் மக்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்; பொதுமக்கள் வெளியே வரும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
அறிகுறிகள் இருப்பின் உடனடியாக பரிசோதனை செய்து கொள்வது அவசியம். முகக்கவசம் மூலமே நுண்கிருமி தொற்று பரவுவதை தடுக்க முடியும். காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் மறைக்க வேண்டாம். கரோனா அறிகுறி இருந்தால் 3 நாட்களுக்குள் மருத்துவரை அணுக வேண்டும். கரோனா விவகாரத்தில் முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்;சிறுபிள்ளைத்தனமாக நடக்கக் கூடாது. அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்." என்றார்.