Published on 10/09/2019 | Edited on 10/09/2019
நடப்பாண்டில் மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் சுமார் 1.91 கோடி மக்கள் பயணம் செய்துள்ளனர் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு.

சென்னை மெட்ரோ ரயிலில் நடப்பாண்டில் ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சுமார் 1.91 கோடி மக்கள் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 29,65,307 பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர். குறிப்பாக ஆகஸ்ட் மாதம் 19 நாட்களில் மட்டும் நாளொன்றுக்கு 1 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளனர். பொதுமக்கள் மத்தியில் மெட்ரோ ரயில் சேவை மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.