Skip to main content

தமுமுகவினர் திடீர் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு!

Published on 15/11/2018 | Edited on 15/11/2018
va

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  வத்தலக்குண்டு காந்திநகர் பகுதியில் நிறுவப்பட்டிருந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக கொடிக்கம்பத்தை மர்ம மனிதர்கள் வெட்டிசாய்துள்ளனர்.  

 

va

 

இச்சம்பவத்தை கண்டித்தும் கொடி கம்பத்தை வெட்டி சாய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி  தமுமுக நகர தலைவர் இம்தியாஸ், செயலாளர் முகமது ரிஜால், மமக நகர செயலாளர் அலாவுதீன் மற்றும் அக்கட்சியினர் வத்தலக்குண்டு மெயின் ரோட்டில் பள்ளிவாசல் முன்பு சாலையில் இருசக்கர வாகனங்களை குறுக்கே நிறுத்தி  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் வத்தலக்குண்டு மதுரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வத்தலக்குண்டு போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளிக்கவே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக கோஷ்டி பூசலுக்கு முற்றுப்புள்ளி-ஐந்து ஒன்றியமாக பிரிக்கப்பட்ட தொகுதி

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
End of DMK party tussle- Constituency divided into five unions

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியை எதிர்க்கட்சியான அதிமுக கைப்பற்றியதில் மூன்றாவது முறையாக தேன்மொழி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். அப்படி இருந்தும் கூட ஆளுங்கட்சியான அந்தப்பகுதி திமுகவினர் இத்தொகுதியை தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆர்வம் கட்டாமல் தங்களுக்குள் கோஷ்டி பூசலை உருவாக்கிக் கொண்டு கட்சியை வளர்க்கவும் சரிவர ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தனர். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவே அறிவாலயம் அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறது.

இந்த நிலக்கோட்டை தொகுதியில் வத்தலகுண்டு மற்றும் நிலக்கோட்டை என இரண்டு யூனியன்கள் உள்ள. இந்த யூனியன்களுக்குட்பட்ட பகுதிகளை 5 ஒன்றியங்களாக பிரித்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வத்தலக்குண்டு ஒன்றியம் இரண்டாக பிரிக்கப்பட்டு வத்தலக்குண்டு வடக்கு, வத்தலக்குண்டு தெற்கு என புதிய ஒன்றியங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 3 பேரூராட்சிகள், 8 ஊராட்சிகள் அடங்கிய வடக்கு ஒன்றிய பொறுப்பாளராக கே.பி. முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் 9 ஊராட்சிகள் அடங்கிய புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தெற்கு ஒன்றியத்திற்கு கனிக்குமார் ஒன்றிய பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

End of DMK party tussle- Constituency divided into five unions

இதேபோல் நிலக்கோட்டை யூனியனை மூன்று ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. நிலக்கோட்டை தெற்கு ஒன்றியத்தில் நிலக்கோட்டை பேரூராட்சி மற்றும் 9 ஊராட்சிகளை அடங்கிய பகுதிக்கு மணிகண்டன் ஒன்றிய பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிலக்கோட்டை வடக்கு ஒன்றியம் 7 ஊராட்சி ஒன்றியங்களாக சுருக்கப்பட்டு ஒன்றிய பொறுப்பாளராக சௌந்தரபாண்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஒன்றிய செயலாளர் பதவி கேட்டு நீண்ட நாள் போராடி வந்த கரிகால பாண்டியனுக்கு பதவி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே மேற்கு ஒன்றியம் என ஒரு கட்டமைப்பு பிரிக்கப்பட்டுள்ளது.

அம்மையநாயக்கனூர் பேரூராட்சி மற்றும் 7 ஊராட்சிகள் உள்ளடக்கிய பகுதிகளுக்கு கரிகால பாண்டியன் ஒன்றிய பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிலக்கோட்டை தொகுதியில் திமுக அதிக அளவில் வாக்குகளை பெற்றுத் தர வேண்டும். பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து சட்டமன்ற தேர்தலிலும் திமுக கொடி பறக்க வேண்டும் என்பது கட்சித் தலைமையின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்காகவே கோஷ்டி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக ஒன்றியங்களை பிரித்து புது வியூகத்தை உருவாக்கி தேர்தல் களத்தை சந்திக்க ஆளும் கட்சியான திமுக தயாராகி வருகிறது.

Next Story

புதிய கால்வாய் வெட்டித்தர வலியுறுத்தி விவசாயிகள் பேரணி!

Published on 04/09/2022 | Edited on 04/09/2022

 

Farmers rally insisting on cutting a new canal!

 

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே இருக்கும் விராலிப்பட்டி, எழுவனம்பட்டி, பூவம்பட்டி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீர் ஆதாரம் இல்லாமல் தரிசாக கிடக்கின்றன.

 

இதனால் இப்பகுதியில் விவசாயம் செழிக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கவும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணையிலிருந்து வத்தலகுண்டு மற்றும் அதைசுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கு புதிய கால்வாய் வெட்டி தண்ணீர் கொண்டு வர வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பேரணி நடைபெற்றது. அதுபோல் விளைபொருளுக்கு ஆதார விலை, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, மின்கட்டண உயர்வை ரத்து செய்யும் நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு பதாகைகள் பேரணியில் எடுத்துச் செல்லப்பட்டன. இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். பேரணி முடிவில்  சங்கம் மாநில தலைவர் போஸ் தலைமையில் நடந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.